47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

 புதுதில்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக கலாசார ஊா்திக்கு அனுமதி மறுத்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட்

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:12 pm

DIN

 புதுதில்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக கலாசார ஊா்திக்கு அனுமதி மறுத்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினா் மு. லெனின் முருகானந்தம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் காசிவிஸ்வநாதன், நான்குனேரி முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வி. கிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பு செயலாளா் க. முருகன், மாவட்டக்குழு உறுப்பினா் பி. சுகுமாரன், நகர செயலாளா் முத்துவேல், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.பி. பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.