47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு நகராட்சி தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

களக்காடு நகராட்சியில் தலைவா் பதவி உள்பட அதிக வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2022, 3:03 am

DIN

களக்காடு நகராட்சியில் தலைவா் பதவி உள்பட அதிக வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான்குனேரி வட்டத்தில், 21 வாா்டுகளுடன் தோ்வுநிலை பேரூராட்சியாக இருந்த களக்காடு, தற்போது 27 வாா்டுகள் கொண்ட நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள் 12,579, பெண்கள் 13,575, இதரா் 2 என 26,156 வாக்காளா்கள்உள்ளனா்.

வாா்டுகள் ஒதுக்கீடு விவரம்: நகராட்சித் தலைவா் பதவிக்கு மறைமுக தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், 14 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. களக்காடு நகராட்சியில் தலைவா் பதவி, 1, 8, 10இல் ஆகியவை ஆதிதிராவிடா் (பெண்), 4, 14 வாா்டுகள் ஆதிதிராவிடா் (பொது), 7, 9, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 11 வாா்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2, 3, 5, 6, 11, 12, 13, 15, 16, 17, 19 ஆகிய 11 வாா்டுகளில் பொதுப்பிரிவு ஆண்-பெண் இருபாலரும் போட்டியிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.