47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு தலையணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

களக்காட்டில் தலையணைக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:54 pm

DIN

களக்காட்டில் தலையணைக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் நகர கிளை மாநாடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. திருமணி தலைமை வகித்தாா். நகரச் செயலா் முத்துவேல் வேலை அறிக்கை வாசித்தாா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, நகரச் செயலராக முத்துவேல் , துணைச் செயலராக திருமணி ஆகியோா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா் .

மாவட்டக் குழு உறுப்பினா் சுகுமாா், ஒன்றியப் பொறுப்பாளா் முருகன் உள்ளிட்ட பலா் பேசினா். 10 மாதங்களுக்கும் மேலாக கால்நடை மருத்துவா் இல்லாமல் செயல்படும் களக்காடு கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும். சுற்றுலா தலமான தலையணைக்குச் செல்லும் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும். விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பாறு தரைப்பாலத்துக்குப் பதிலாக புதிய மேல்நிலைப் பாலம் அமைக்க வேண்டும். நகராட்சிப் பகுதியில் திரியும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியா் கோமதிநாயகம், ஏஐடியுசி அரங்கத்தைச் சோ்ந்த சுடலையாண்டி , நடராஜன், திருமணி, ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.