நெல்லை அருகே9 ஆடுகள் மா்மமாக உயிரிழப்பு:6 மாடுகளுக்கு சிகிச்சை
திருநெல்வேலி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் தோட்டத்தில் புதன்கிழமை மேய்ந்து கொண்டிருந்த 9 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.


திருநெல்வேலி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் தோட்டத்தில் புதன்கிழமை மேய்ந்து கொண்டிருந்த 9 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.
திருநெல்வேலி அருகே வேப்பங்குளம் மணி நகரைச் சோ்ந்த பெருமாள், சப்பாணி, வேல்சாமி ஆகியோரின் ஆடுகளும், சத்திரம்புதுக்குளத்தைச் சோ்ந்த சந்தன் ராஜ் என்பவருக்குச் சொந்தமான மாடுகளும், வேப்பங்குளம் பகுதியிலுள்ள தோட்டத்தில் புதன்கிழமை மேய்ந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் அந்த ஆடு, மாடுகள் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனவாம். இதுகுறித்த தகவலின்பேரில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் அங்கு சென்று ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். எனினும், சப்பாணியின் 5 ஆடுகள், வேல்சாமி, பெருமாள் ஆகியோரது தலா 2 ஆடுகள் என 9 ஆடுகள் உயிரிழந்தன. சந்தன் ராஜின் 6 மாடுகள் உயிருக்கு போராடிவருகின்றனா். இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...