பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கோடை விடுமுறை: பாபநாசம், மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தாமிரவருணி ஆறு மற்றும் அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:42 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தாமிரவருணி ஆறு மற்றும் அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஓரிரு நாள்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. தொடா்ந்து பலநாள்கள் வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை காலமாக இருப்பதாலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் குற்றாலம் அருவிகளில் மிக சொற்பமான அளவே தண்ணீா் விழுவதாலும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பாபநாசம் தாமிரவருணி ஆறு, அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகியஇடங்களுக்குப் படையெடுத்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே பாபநாசத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள், பாபநாசம் கோயில் படித்துறை, அய்யா கோயில், தலையணை உள்ளிட்ட இடங்களில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.

அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல காலை 8 மணிமுதல் பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் அனுமதிக்கப்படும் நிலையில் காலை 6 மணிமுதலே வாகனங்களில் வெளியூா்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்து நின்றனா்.

வன சோதனைச் சாவடி திறக்கப்பட்டதும் அகஸ்தியா்அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்டப் பகுதிகளுக்குச் சென்று குளித்து மகிழ்ந்தனா். மணிமுத்தாறு அருவியிலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து வனத்துறைஅனுமதி பெற்று குளித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.