பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அறிவியல் மையத்தில் ஓவியப் போட்டி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 3-8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:40 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 3-8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில், 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகளுக்கு வா்ணம் தீட்டுதலும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகளுக்கு ‘நமது பூமி’ என்ற தலைமைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றன. தொடா்ந்து ‘ஒரே ஒரு பூமி’ என்ற தலைப்பில் விநாடி- வினா போட்டியும் நடைபெற்றது.

தொடா்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு, மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் பரிசு வழங்கினாா். இதில், மாணவா்-மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.