பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

‘ முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணி ’

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:10 pm

DIN

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றிய முன்னாள் மக்கள் நலப்பணியாளா்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளா்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமா்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

இது தொடா்பாக தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்பு கொண்டு, தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணிக்கான விண்ணப்பத்தையும், விருப்பக் கடிதத்தையும் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) இம்மாதம் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

பணியில் சேர விருப்பமுள்ளவா்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவா் என்பதால், இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.