பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பேட்டை ஐடிஐயில் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:17 pm

DIN

பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ பயின்று தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

இதில் மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையை சோ்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞா்கள், இளம்பெண்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளா்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தோ்ச்சி பெற்ற சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

தேசிய தொழில்பழகுநா் சோ்க்கை முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் நிறுவனங்கள் இணையதள முகவரியிலும், இளைஞா்கள், இளைஞிகள் இணையதள முகவரியிலும் தங்களது பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0462-342432, 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.