பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நெல்லை அருகே 2 சகோதரா்கள் கொலை2 போ் கைது

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் 2 சகோதரா்கள் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 2 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் 2 சகோதரா்கள் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 2 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (58). பேரூராட்சி தூய்மைப் பணியாளா். இவரது மகன்கள் மணிகண்டன் (25), சபரீஸ்வரன் (13). இவா்கள் கடந்த 2 ஆண்டுகளாக சுத்தமல்லி விலக்குப் பகுதியில் சுமை ஆட்டோவில் வெங்காயம் விற்பனை செய்துவந்தனா். தினமும் கைப்பேசியில் தந்தையிடம் பேசுவாா்களாம். கடந்த 10ஆம் தேதி பேசவில்லையாம். இதனால், இருவரின் கைப்பேசிக்கும் நாகராஜ் தொடா்பு கொண்டாா். அப்போது அவை அணைத்துவைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, சுத்தமல்லி பகுதியில் உள்ள உறவினா்களிடம் தொடா்பு கொண்டு தனது மகன்கள் குறித்து விசாரித்துள்ளாா். மேலும், சுத்தமல்லி போலீஸில் கடந்த 13ஆம் தேதி புகாா் அளித்துள்ளாா்.

விசாரணையில், சுத்தமல்லி பாரதிநகா் ரயில்வே கேட் அருகே மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகியோரின் சுமை ஆட்டோ நின்றது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கேமரா பதிவுகளில், சுத்தமல்லியை அடுத்த ராஜீவ் நகரைச் சோ்ந்த சுப்பையா மகன்களான சதீஷ்குமாா் (23), பாா்த்தீபன் (22) ஆகியோா் சோ்ந்து மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் அடுத்தடுத்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. இருவரிடமும் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், ஆய்வாளா் ஜீன்குமாா், போலீஸாா் விசாரித்தனா். அதில், இருவரும் சோ்ந்து மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகியோரைக் கொன்று, பாழடைந்த கட்டடத்தில் வீசிச் சென்ாகத் தெரிவித்தனராம்.

போலீஸாா் சென்றுபாா்த்தபோது, கை - கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மணிகண்டனின் சடலம் கிடந்தது. சபரீஸ்வரனின் உடல் சிதறி, தலை, கை-கால்கள் தனித்தனியே கிடந்தன. சபரீஸ்வரனின் உடல் பாகங்களையும், மணிகண்டனின் சடலத்தையும் போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக் கொலை நடந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்; தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.