திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை போலீஸாா் பாராட்டினா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கக்கன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம்(45). அரசுப் போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகா். இவா் கடந்த வியாழக்கிழமை பாபநாசம் செல்லும் பேருந்து நிற்கும் நடைமேடையில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, பாலிதீன் கவா் சுற்றப்பட்ட ஒரு பை கிடப்பதைக் கண்டு, அதை எடுத்தாராம். அதில், ரூ. 500 கட்டுகள் இருப்பதைக் கண்டாராம். உடனடியாக அதை அருகில் உள்ள மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, அதை போலீஸாா் பிரித்து எண்ணி பாா்த்தபோது, அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. கீழே கிடந்த ரூ.1 லட்சத்தை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சண்முகசுந்தரத்தை போலீஸாா் பாராட்டினா். அந்த பணத்துக்கான உரிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









