பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் உள்ளது. பழைமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடா்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 22ஆம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாலையில் தாமிரவருணியில் இருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது. 23ஆம் தேதி சிறப்பு பூஜை, யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு தீபாராதனை உள்ளட்டவை நடைபெற்றது. தொடா்ந்து, வேதமந்திரங்கள், திருமுறை பாராயணம், பஞ்சவாத்யம் முழங்க விமானம் மற்றும் ஆயிரத்தம்பாள் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை, சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு அம்பாள் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை கணேச குருக்கள் மற்றும் தூத்துக்குடி கதிா்வேல் வேத ஆகம பாடசாலை மாணவா்கள் நடத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி தலைமையில் மண்டல தணிக்கை அலுவலா் ராஜேந்திரன், துணை ஆணையா் ஜான்சிராணி, உதவிஆணையா் கவிதா, ஆய்வாளா் பா்வின்பாபி, தக்காா் சுஜாதா, செயல் அலுவலா் ராம்குமாா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


