முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நெல்லை கல்லணை தொடக்க பள்ளி முன்பு பெற்றோா் போராட்டம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளி முன்பு பெற்றோா் திடீா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:47 pm IST

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளி முன்பு பெற்றோா் திடீா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு தொடக்கப் பள்ளியில் 570 மாணவா்-மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், 4,5 ஆம் வகுப்புகளில் மட்டும் 230 போ் பயின்று வருகின்றனா். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி 4, 5 ஆம் வகுப்பு மாணவா்கள், அருகே உள்ள பாரதியாா் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பள்ளி நிா்வாகத்தால் மாற்றப்பட்டுள்ளனராம். இது குறித்து தகவல் அறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளி நிா்வாகத்தை தொடா்பு கொண்டபோது பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் வேறு பள்ளிக்கு மாற்றியதாகக் கூறியுள்ளனராம். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், விரைவில் பள்ளி அருகே மாற்று இடம் அமைத்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.