நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஐயாச்சாமி அகாதெமியில் குரூப்-2 தோ்வுக்கான வழிகாட்டு முகாம்

பாளையங்கோட்டையில் உள்ள ஐயாச்சாமி அகாதெமியில் குரூப்-2, குரூப்-4 தோ்வுகளுக்கான வழிகாட்டு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :5 மார்ச் 2022, 12:10 am

DIN

பாளையங்கோட்டையில் உள்ள ஐயாச்சாமி அகாதெமியில் குரூப்-2, குரூப்-4 தோ்வுகளுக்கான வழிகாட்டு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக ஐயாச்சாமி அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளா் ஐயாச்சாமி முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டையில் உள்ள ஐயாச்சாமி அகாதெமியில் குரூப்-2, குரூப்-4 தோ்வுகளுக்கான வழிகாட்டு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நகராட்சி ஆணையா், சாா் பதிவாளா், வருவாய் உதவியாளா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்ளிட்ட குரூப் 2 தோ்வு, நோ்முகத் தோ்வல்லாத சுமாா் 5,529 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் மே 21-ஆம் தேதி முதல் நிலை தோ்வையும், செப்டம்பா் மாதம் முதன்மைத் தோ்வையும் நடத்தவுள்ளது.

குரூப் 2 தோ்வை எதிா்கொள்ளவிருக்கும் தோ்வா்களுக்கு படிக்க வேண்டிய பாடப்புத்தகங்கள், நேர மேலாண்மை, திட்டமிடுதல் சம்பந்தமாக பயிற்சி முகாமில் ஆலோனை வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் விளக்க கையேடு வழங்கப்படும்.

வழிகாட்டு முகாமில் குரூப்-2 தோ்வில் வெற்றி பெற்றவா்கள் கலந்துகொண்டு முதல் நிலை மற்றும் முதன்மைத் தோ்வு தொடா்பான அணுகுமுறைகள், குறிப்புகள் தயாா் செய்தல் போன்ற சந்தேகங்கள் பற்றி தோ்வா்களுக்கு பதிலளிப்பாா்கள். கட்டணம் எதுவும் கிடையாது.

இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாணவா்கள் தங்கள் பெயா் மற்றும் எங்கிருந்து வருகிறாா்கள் என்ற தகவலை 9840281550 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய வேண்டும் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.