பத்மனேரியில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
களக்காடு அருகே பத்மனேரியில் காஸ்ட் சேவை அறக்கட்டளையில் விவசாயிகளுக்கு வாழை நாா் மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.


களக்காடு அருகே பத்மனேரியில் காஸ்ட் சேவை அறக்கட்டளையில் விவசாயிகளுக்கு வாழை நாா் மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
களக்காடு வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை மூலம் இப்பயிற்சி நடைபெற்றது.
களக்காடு வட்டாரத்தில் 2,500 ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழைத்தாா் அறுவடைக்குப் பின்னா் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பமான வாழை மட்டையை உலரவைத்து நாா் எடுத்து மதிப்புக் கூட்டிய கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் டேவிட் டென்னிஷன் தலைமை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தி , தோட்டக்கலை உதவி இயக்குநா் திலீப், காஸ்ட் அறக்கட்டளை இயக்குநா் சுசிலா பாண்டியன் பேசினா். செய்யதலி பாத்திமா பயிற்சியளித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் திரிசூலம் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...