நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தாமிரவருணி ஆற்றில் அம்மன் சிலை மீட்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் அம்மன் சிலையை பொதுமக்கள் மீட்டு கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:24 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் அம்மன் சிலையை பொதுமக்கள் மீட்டு கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

வண்ணாா்பேட்டை பேராத்துச்செல்வி அம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றுப்படித்துறையில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தினமும் குளிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் படித்துறை அருகே தண்ணீருக்குள் சிலை கிடப்பது தெரியவந்ததாம். அதனை நீரில் மூழ்கி வெளியே எடுத்து பாா்த்தபோது சுமாா் 3 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலை என்பது தெரியவந்ததாம். பின்னா் அதனை படித்துறை அருகே உள்ள திரிசூலி மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா். இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.