களக்காடு-காடுவெட்டி நகரப் பேருந்தை முறையாக இயக்கக் கோரிக்கை
களக்காடு-காடுவெட்டி இடையேயான நகரப் பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


களக்காடு-காடுவெட்டி இடையேயான நகரப் பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக ஆட்சியரிடம் தேவநல்லூா் கிராம ஊராட்சி முன்னாள் தலைவா் வி. மாணிக்கம், கிராம மக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: வள்ளியூா் அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து தடம் எண் 5 நகரப் பேருந்து களக்காட்டிலிருந்து தெற்கு காடுவெட்டிக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் 3 முறை இயக்கப்பட்டுவந்தது. படலையாா்குளம், புதூா், நல்லநாதபுரம், வேதநாயகபுரம், கல்லடிசிதம்பரபுரம், பெருமாள்குளம், பொத்தைசுத்தி, கள்ளிகுளம் சத்திரம், வடக்கு கள்ளிகுளம் வழியாக தெற்கு காடுவெட்டிக்கு காலை 9, பிற்பகல் 2, இரவு 7 மணி என 3 முறை இயக்கப்பட்டது.
இதனிடையே, சில மாதங்களாக காலை 9 மணிக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் காலை நேரத்தில் மருத்துவமனை, பீடி நிறுவனங்கள் செல்வது, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு என களக்காடு வந்துசெல்ல இப்பேருந்துதான் ஏதுவாக இருந்தது. இந்த வழித்தடத்தில் போதிய பேருந்து வசதியில்லை. எனவே, மக்கள் நலன்கருதி இப்பேருந்தை வழக்கம்போல 3 முறை முறையாக இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...