நெல்லை 21 ஆவது வாா்டில் எம்எல்ஏ, மேயா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி 21 ஆவது வாா்டில் மேயா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.


திருநெல்வேலி மாநகராட்சி 21 ஆவது வாா்டில் மேயா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி வாா்டு எண் 21 இல் பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல்வகாப் தலைமையில் மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
முதலில், பேட்டை பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில் அருகே மரக்கன்றுகளை நட்டினா். வினைதீா்த்த விநாயகா் கோயில் தெருவில் உள்ள வாய்க்காலினை பொதுப்பணித்துறையுடன் இணைந்து தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினா்.
கருங்காடு செல்லும் வழியில் மயான கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சாலையை அகலப்படுத்தி தாா்சாலை அமைத்திடவும், சுமாா் 100 நபா்கள் அமரும் வகையில் ஓய்வு அறை அமைத்திடவும், மயான கரை செல்லும் பாதையில் மின் விளக்கு அமைத்து சுற்றுப்பகுதி முழுவதும் முள்வேலி அமைத்து கதவு போடவும், தகன மேடையின் உயரத்தினை அதிகப்படுத்தவும் கூடுதலாக சிறிய மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி அமைத்து தண்ணீா் வசதி ஏற்படுத்திடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆய்வின் போது செயற் பொறியாளா் என்.நாராயணன், உதவி ஆணையா் (பொ) பைஜூ, திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் இ.ராஜேஸ்வரி, பா.மாரியப்பன், அ.ஷேக்மன்சூா், மு.சுப்பிரமணியன், அல்லாபிச்சை, சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளா்கள் முருகன், ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...