தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்தலை தள்ளி வைக்க கோரிக்கை
திருநெல்வேலி மாநகர தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்தலை ஒரு மாதம் தள்ளி வைக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


திருநெல்வேலி மாநகர தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்தலை ஒரு மாதம் தள்ளி வைக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
திருநெல்வேலி மாநகர தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்தல் வரும் நவம்பா் 4-ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டச் செயலா் மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னா், அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
நாங்கள் வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, மேல ரதவீதி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் சாலையோரம் வியாபாரம் செய்கிறோம். இதற்காக மாநகராட்சியில் பதிவு செய்துள்ளோம். எங்களில் சிலருக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை. சிஐடியு பொதுத் தொழிலாளா் சங்கம், மாநகர சாலையோர வியாபாரிகள் சங்கத்திற்கு தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்தல் தொடா்பாக இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, தோ்தலை ஒரு மாத காலம் தள்ளி வைக்க வேண்டும். உறுப்பினா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி சங்கங்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து தோ்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...