12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரூ. 200 கோடி பங்களா குற்றச்சாட்டு! கேரள பாஜக தலைவர் வேட்புமனு ஏற்பு!

கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனு ஏற்கப்பட்டது பற்றி...

Rajeev Chandrasekhar

ராஜீவ் சந்திரசேகர் - கோப்புப் படம்

Published On :

ரூ. 200 கோடி பங்களாவை கேரள பாஜக தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் கணக்கில் காட்டவில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்தியில், அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.

நேமம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 93 கோடி என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு கோரமங்களா 3வது பிளாக்கில் உள்ள ரூ. 200 கோடி மதிப்பிலான 49,000 சதுர அடி பங்களாவை ராஜீவ் சந்திரசேகர் கணக்கு காட்டவில்லை என்று காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

குறிப்பிட்ட முகவரியில் உள்ள பங்களாவுக்கு கடந்த மார்ச் 17 ஆம் தேதி சொத்து வரி கட்டிய ரசீதையும், 2024 மக்களவைத் தேர்தலின் போது ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அந்த முகவரியைக் குறிப்பிட்டிருந்ததையும் ஆதாரமாக காங்கிரஸ் முன்வைத்தது.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

மேலும், வேட்புமனு ஏற்கப்பட்டதன் மூலம் தன்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருச்சூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடுவது கட்டாயமாகும். ஆனால், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கையையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2,125 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவற்றில் 1,745 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 354 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 3 பேர் திரும்பப் பெற்றனர்.

Summary

Rs 200 Crore Bungalow Allegation: Kerala BJP Leader's Nomination Accepted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.