கேரளம் பேரவைத் தேர்தலில் நேமம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேரளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், நேமம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் சனிக்கிழமையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் மாநில கல்வி அமைச்சருமான வி. சிவங்குட்டி மற்றும் காங்கிரஸ் சார்பாக கே.எஸ். சபரிநாதனும் போட்டியிடுகின்றனர்.
ராஜீவ் சந்திரசேகர் அளித்த வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 93 கோடிக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் சந்திரசேகரின் அசையும் சொத்து மதிப்பு சுமார் ரூ. 78 கோடி என்றும், அவரின் மனைவியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 18.10 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றில், கையிருப்புப் பணம், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வைப்புத்தொகைகள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள், பங்குகள் மற்றும் பிற முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், அவரது அசையா சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ. 15.07 கோடி.
அதுமட்டுமின்றி, ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ. 107 கோடி அளவிலான கடன் பொறுப்புகளும், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கடனும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
2024 - 25 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கின்படி, அவரின் மொத்த வருமானம் ரூ. 92,91,633 என்றும், அவரது மனைவியின் மொத்த வருமானம் ரூ. 60,50,168 என்றும் தெரிவித்துள்ளனர்.
2023-ல் களமசேரியில் ஏற்பட்ட குண்டுவெடிப்புடன் ஹமாஸ் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக சந்திரசேகர் மீது இரு குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டன. இருப்பினும், இரு வழக்குகளிலும் அவருக்கு எதிரான நிர்ப்பந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என காவல்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
Keralam Assembly Elections: BJP state chief Rajeev Chandrasekhar declares assets of over Rs 93 crore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்த மீனாட்சி நடராஜனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளா்களின் வேட்புமனு ஆவணங்கள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



