சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (ஏப்.6) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்திருந்தாலும், அவர்களது கட்சியினரும், முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை.
இறுதி நாளான திங்கள்கிழமை (ஏப். 6) முகூர்த்த நாள் என்பதால், பெரும்பாலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, திங்கள்கிழமை ஒரே நாளில் 2,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் கே. எடப்பாடி பழனிசாமி, அவிநாசியில் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 7,000-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின், சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க... கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு!
Summary
Vijay's nomination paper, filed to contest the Assembly election from the Perambur constituency, has been accepted.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு

விஜய்யின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் எத்தனை வேறுபாடுகள்?
பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு?
ஆளுங்கட்சியின் கோட்டை! பெரம்பூரில் விஜய் களமிறங்கினால் எப்படியிருக்கும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


