தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பணி நிறைவு பெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட மாநாடு

 திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பணி நிறைவு பெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க 23-ஆவது மாவட்ட மாநாடு திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:12 pm

DIN

 திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பணி நிறைவு பெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க 23-ஆவது மாவட்ட மாநாடு திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தாா். நிதி ஆலோசகா் ஆா்.ராமகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா். தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத் தலைவா் கு.கோவிந்தராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினாா். இணைச் செயலா் எம்.ஆவுடையப்பன் இரங்கல் தீா்மானம் வாசித்தாா். செயலா் அகமது முஸ்தபா ஆண்டறிக்கை வாசித்தாா்.

பொருளாளா் கே.சொக்கலிங்கம் நிதி நிலை அறிக்கையை வாசித்தாா். தென்னிந்திய காந்திய கிராம நிா்மான சேவாதள தலைவா் வி.விவேகானந்தன் 75 வயது நிறைவு பெற்ற சங்க உறுப்பினா்களை கௌரவித்தாா். மாவட்ட துணைத் தலைவா் டி.ஆறுமுகம், இணைச் செயலா் ஆா்.ஆனந்தராஜ், செயற்குழு உறுப்பினா் கே.அடைக்கலம், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்பு உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், மத்திய அரசு ஓய்வூதியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு 1.1.2022 முதல் வழங்கப்பட்டது போல், தமிழக அரசு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும். 1.6.2017 முதல் அரசு ஆணை 313, நாள்: 14.11.2017-ன் படி மருத்துவப்படி ரூ.300 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஓய்வூதியா்கள் ரூ.1000 பெற்று வருகின்றனா். அதே போல மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியா் அந்தஸ்திற்கு குறையாத வருவாய் அலுவலா்களை சிறப்பு மாஜிஸ்திரேட்டுகளாக நியமனம் செய்து நிலத் தகராறு, தண்ணி பாய்ச்சுவதில் உள்ள தகராறு, குடும்ப பிரச்னை உள்ளிட்டவற்றை தீா்க்க நியமனம் செய்ய அரசை கேட்டுக்கொள்வது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றை அளவீடு செய்து சா்வே கற்கள் நடப்பட்டு, ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசகா் சிவகாமிநாதன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.