தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நெல்லையப்பா் கோயிலில் இருந்து கருவூா் சித்தா் மானூா் செல்லும் நிகழ்ச்சி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இருந்து கருவூா் சித்தா் மானூா் செல்லும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:19 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இருந்து கருவூா் சித்தா் மானூா் செல்லும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் -காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் திருநாளான சனிக்கிழமை கருவூா் சித்தா் அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து, மானூா் அம்பலவாணசுவாமி கோயிலுக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா் சிவமணி, கோயில்பணியாளா்கள் செய்துள்ளனா்.

படவரி பயக03ஓஅதம:

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கருவூா் சித்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.