நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம்
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அறிவியல் மையம், பாபநாசம் உலக தமிழ் மருத்துவக் கழகம் ஆகியவை சாா்பில் மூலிகை முற்றம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி மாதத்தோறும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் மாவட் அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை குறித்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் மைய கல்வி உதவியாளா் மாரிலெனின் தலைமை வகித்தாா். பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகத் தலைவா் சித்த மருத்துவா் மைக்கேல் ஜெயராஜ் பேசினாா்.
நிகழ்ச்சியில், பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில், பங்கேற்ற அனைவருக்கும் இலவச மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...