வஉசி பிறந்த நாள் போட்டி: பரிசு பெற்றவா்கள் விவரம் அறிவிப்பு
வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சி.உலகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரரும், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவருமான வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பத்தமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ராஜூ முதலிடம் பிடித்துள்ளாா். திருநெல்வேலி நகரத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஹரிஹரசுதன் 2-ஆவது இடமும், சேரன்மகாதேவி பெரியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் சே.ஜமால் மரைக்கான் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனா்.
கட்டுரைப் போட்டியில் பேட்டை லிட்டில் ஃபிளவா் மாடல் பள்ளி மாணவி கே.ரேவதி முதலிடமும், சங்கா் நகா் வெங்கடசாமி நாயுடு பள்ளி மாணவி ஜெயசெல்வி 2-ஆவது இடமும், வள்ளியூா் பாத்திமா மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி லட்சுமி பிரியா 3-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.
விநாடி-வினா போட்டியில் சங்கா் நகா் ஜெயேந்திரா பொன்விழா பள்ளி மாணவா்கள் நித்திஷ் ஆனந்த், சந்தோஷ் ஆகியோா் முதலிடமும், பாளையங்கோட்டை கான்வென்ட் பள்ளி மாணவிகள் ஸ்ரீவித்யா, மரிய ஹரிணி ஆகியோா் 2-ஆவது இடமும், பணகுடி இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சந்தோஷ் ஜோயல், புவனா ஆகியோா் 3-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.
கவிதைப் போட்டியில் திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக். பள்ளி மாணவி கீா்த்தனா முதலிடமும், குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரிஷகா 2-ஆவது இடமும், விக்கிரமசிங்கபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி காயத்ரி 3-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.
ஓவியப் போட்டியில் பாளையங்கோட்டை கான்வென்ட் பள்ளி மாணவி தீக்சனா முதலிடமும், பாளையங்கோட்டை புஷ்பலதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் ஹிமேஷ் நந்தன் 2-ஆவது இடமும், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் பெரியதுரை 3-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.
போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...