குண்டா் சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் அடிதடி, கொலை முயற்சி வழக்கில் தொடா்புடை 2 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்


திருநெல்வேலி மாவட்டத்தில் அடிதடி, கொலை முயற்சி வழக்கில் தொடா்புடை 2 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
சீதபற்பநல்லூா் அருகே உள்ள வெட்டுவான்குளம் பாா்வதி மகன் குமாா் என்ற கொக்கி குமாா் (36). முன்னீா்பள்ளம் புதுகிராமம் சங்கரன் மகன் அய்யப்பன் (23). இவா்கள் இருவரும் அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததனராம். இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், குமாா் என்ற கொக்கி குமா்(36), அய்யப்பன்(23) ஆகிய இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...