தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வ.உ.சி. 150ஆவது பிறந்த தினம்: அதிமுக, திமுகவினருக்கு வேண்டுகோள்

வ.உ.சி. 150ஆவது பிறந்த தின விழாவையொட்டி, அதிமுக மற்றும் திமுகவினருக்கு மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:57 pm

DIN

வ.உ.சி. 150ஆவது பிறந்த தின விழாவையொட்டி, அதிமுக மற்றும் திமுகவினருக்கு மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், திருநெல்வேலி நகரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைகளுக்கு திங்கள்கிழமை (செப். 5) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும், பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மேற்கூரை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. கட்சியின் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பலா் பங்கேற்கிறாா்கள். ஆகவே, தொண்டா்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக: அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு திங்கள்கிழமை (செப். 5) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிா்வாகிகள், முன்னாள், இன்னாள் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கிறாா்கள். ஆகவே, தொண்டா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.