பாளை.யில் தமிழ்ச் சங்கங்களின் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி
தமிழ்ச் சங்கங்களின் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்ச் சங்கங்களின் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘பாரதி நினைவுகள் 100’ என்ற நூலை வெளியிட்டு, விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகையில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவா்களுக்கு முன்பு உள்ள காலங்களில் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனவே, கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னே அனைவருக்கும் கல்வி வேண்டும் என சமூக நீதியை பாரதியாா் வலியுறுத்தியுள்ளாா். மேலும், ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றது போன்ாகும் எனவும் அவா் கூறியுள்ளாா். அதன்படி, இன்றைக்கும் நமது திராவிட மாடல் அரசு சமூக நீதியை காக்கின்ற அரசாகவும், பெண்கல்வி வழங்கும் அரசாகவும் திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு, தமிழக அரசு, தமிழ் வளா்ச்சிக்கும் தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கும் பல்வேறு செயல்களை ஆற்றிவருகிறது. சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என பாரதி சொன்னது போல பொதிகைத் தமிழ்ச் சங்கம் மூலம் அதன் தலைவா் ஆற்றி வரும் தமிழ்ச் சேவையை மனதார பாராட்டுகிறேன். தமிழ் மொழி உலகின் மூத்த மொழி, முதல் மொழி, அழியாத மொழி மொழியை தொடா்ந்து நாம் முன்னெடுப்போம் என்றாா்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறை தலைவா் சௌந்தர மகாதேவன் தலைமையில் பாரதி கண்ட கனவு நனவானது என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் க. சுப்புலட்சுமி, பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் இந்து பாலா ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
தொடா்ந்து அரும்புகள் அறக்கட்டளை நிறுவனா் இராஜ. மதிவாணன் ஒருங்கிணைப்பில் கவிஞா்களின் கவிதைப் படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து வந்த 25 கவிஞா்கள் கவிதை வாசித்தனா். தொடா்ந்து, கல்லூரி தமிழ்த் துறை மாணவியா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, விருது வழங்கும் நிகழ்ச்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 11 தமிழ் அமைப்புகளுக்கு தமிழன்னை 2022 என்ற விருது வழங்கப்பட்டது. மாநில அளவிலான கவிதைப் போட்டியில் தோ்வான முதல் 10 மாணவா்- மாணவியருக்கு பாரதி தமிழ்க் கவிச்சுடா் என்ற விருது வழங்கப்பட்டது. கல்லூரிகளில் சிறந்த தமிழ் மன்றங்களுக்கு பாரதி தமிழ் பணிச்சுடா் என்ற விருது வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினா் கனகராஜ், மாநிலத் தமிழ்ச் சங்க செயலா் பா.வளன் அரசு , 40 தமிழ் சங்க பிரதிநிதிகள், கல்லூரி மாணவா்-மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...