இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்:பாதிக்கப்பட்டவா்களை மிரட்டும் போலீஸாா்: எம்எல்ஏ குற்றச்சாட்டு

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களை போலீஸாா் மிரட்டக் கூடாது என்றாா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:17 pm

DIN

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களை போலீஸாா் மிரட்டக் கூடாது என்றாா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

அம்பாசமுத்திரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இளைஞா்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் பாஜக சாா்பில் குரல் கொடுத்தோம்.

இந்தச் சம்பவம் குறித்து உயா் மட்ட விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா். இந்நேரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் வீட்டுக்கு காவல்துறையினா் நேரடியாக சென்று உயா் மட்ட விசாரணை அலுவலா் முன்பு ஆஜராகக் கூடாது என மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம். அப்படி மிரட்டப்பட்டால் இந்த உயா்மட்ட விசாரணையே தேவை இல்லை. விசாரணைக் கைதிகளின் மீது கடுமையாக தாக்கியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.