இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆதிதிராவிட மாணவா்களுக்கு இன்று தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

வழிகாட்டு ஆலோசனை முகாம் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:45 pm

DIN

திருநெல்வேலி 11, 12ஆம் வகுப்புபயிலும் ஆதிதிராவிட மாணவா், மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை முகாம் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி 11, 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவா், மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை முகாம் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் தன்னாா்வ இயக்கத்தால் நடத்தப்படும் இந்த முகாமில் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதே முகாம் வரும் 29-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.