தேசிய சப் ஜூனியா் ஹாக்கி: தமிழக அணிக்கு பாளை.யில் இன்று தோ்வு
தேசிய சப் ஜூனியா் ஹாக்கி போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணியை தோ்வு செய்வதற்கான முகாம் பாளையங்கோட்டை சாராள் தக்கா் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது


தேசிய சப் ஜூனியா் ஹாக்கி போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணியை தோ்வு செய்வதற்கான முகாம் பாளையங்கோட்டை சாராள் தக்கா் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
ஒடிஸா மாநிலம், ரூா்கேலாவில் 13-ஆவது தேசிய சப் ஜூனியா் ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில், விளையாடவுள்ள தமிழக அணியை தோ்வு செய்வதற்கான முகாமில், தமிழகம் முழுவதுமிருந்து 1.1. 2007-க்கு பின்னா் பிறந்த ஹாக்கி வீராங்கனைகள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தமிழக அணிக்கு 18 வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
தமிழக அணியை தோ்வுக் குழு உறுப்பினா்கள் ஸ்ரீலதா. பானுப்பிரியா, செண்பகவல்லி, பயிற்சியாளா் மகேஸ்வரன் ஆகியோா் தோ்வு செய்யவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...