நுண்ணீா் பாசனம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டுக்கு 580 ஹெக்டோ் பொருள் இலக்கும் ரூ.3.60 கோடி நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் தங்களுடைய பட்டா, அடங்கல், நிலவரைபடம், ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-2, மண் மற்றும் நீா் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.