இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நெல்லையில் கோடைமழை: மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:43 pm

DIN

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. நண்பகல் முதல் மாலைவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறாா்கள். வெள்ளிக்கிழமையும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால், பிற்பகலுக்கு பின்பு திருநெல்வேலி மாநகரில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.

வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சிந்துபூந்துறை, மேலப்பாளையம், சுத்தமல்லி, கோடகநல்லூா், அபிஷேகப்பட்டி, மானூா், தச்சநல்லூா், தாழையூத்து பகுதிகளில் மழை பெய்தது. கோடை மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.