பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தாமிரவருணி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
Updated On :17 டிசம்பர் 2023, 10:00 am

DIN

தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் பாதுகாப்பு கருதி தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Story image

இதனால் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் மாலை 4:00 மணிக்குள் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

Story image

எனவே, தாமிரவருணி கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.