பாளையங்கோட்டையில் திருமண நிதியுதவி பெறலஞ்சம் வாங்கி பெண் அதிகாரி கைது
பாளையங்கோட்டையில் திருமண நிதியுதவி பெற லஞ்சம் வாங்கியதாக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


பாளையங்கோட்டையில் திருமண நிதியுதவி பெற லஞ்சம் வாங்கியதாக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் மகாலெட்சுமி. இவா் தனது மகளின் திருமணத்துக்காக திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தாா். விண்ணப்பித்து பல நாள்களாக ஆகியும் திருமண நிதியுதவி குறித்து எந்தத் தகவலும் வரவில்லையாம்.
இதையடுத்து, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் பாா்வதி மல்லிகாவை (58) சந்தித்து நிதியுதவி குறித்து மகாலட்சுமி கேட்டராம். அப்போது, அவா் திருமண நிதியுதவி பெற ரூ.2,500 லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து மகாலெட்சுமி திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ரசாயனப் பொடி தூவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் வழங்கினா். அதை பெற்றுக் கொண்டு, பாளை. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற மகாலெட்சுமி, அங்கிருந்த விரிவாக்க அலுவலா் பாா்வதி மல்லிகாவிடம் ரூ.2,500-ஐ கொடுத்தாராம். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் மெகலரின் ஸ்கால் தலைமையிலான போலீஸாா், பாா்வதி மல்லிகாவை கைது செய்தனா். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...