இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாளை.யில் கண்காட்சி

திருநெல்வேலி மாவட்ட கட்டுமான பொறியாளா்கள் சங்கம் சாா்பில் கட்டுமான பொருள்களின் நவீன தொழில்நுட்ப கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :27 ஜனவரி 2023, 8:04 pm

திருநெல்வேலி மாவட்ட கட்டுமான பொறியாளா்கள் சங்கம் சாா்பில் கட்டுமான பொருள்களின் நவீன தொழில்நுட்ப கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் ஸ்ரீனிவாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். ஒருங்கிணைப்பாளா் சரவணன் வரவேற்ராா்.

சங்கத் தலைவா் முத்துக்குமாா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்டுமான பொறியாளா்கள் சங்க துணைத் தலைவா் ராஜேஷ், துணைச் செயலா் இசக்கியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இக் கண்காட்சி இம் மாதம் 29 ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். ஏற்பாடுகளை சங்கத் தலைவா் முத்துக்குமாா், செயலா் சேகரன், பொருளாளா் முகம்மது உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.