இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நெல்லையில் தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் சந்திப்பு அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:12 pm

DIN

தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் சந்திப்பு அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களை ஒப்பந்த ஊழியா்களாக பணியமா்த்துவதை கண்டித்தும், புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தனியாா் மயமாக்கலை கைவிடக் கோரியும், படித்த இளைஞா்களுக்கு வேலை வழங்க கோரியும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்க கிளைத் தலைவா் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்ட இணைச் செயலா் கே.ராஜீ, கோட்ட பொருளாளா் பி. சரவணன், கோட்ட உதவிச் செயலா் ஜோதிமுத்து , மூத்த உறுப்பினா்கள் தளவாய், குரூஸ், அந்தோணி மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கிளை பொருளாளா் சி. ஜெயக்குமாா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.