போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வீடு கட்ட 19 நெசவாளா்களுக்கு ரூ.4 லட்சம் மானியம்: ஆட்சியா் ஆணை வழங்கினாா்

திருநெல்வேலி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 19 கைத்தறி நெசவாளா்களுக்கு வீடு கட்டுவதற்கான ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

News image

பெண்ணுக்கு மானியத் தொகைக்கான ஆணையை வழங்குகிறாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

Updated On :27 நவம்பர் 2023, 10:19 pm


திருநெல்வேலி: திருநெல்வேலி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 19 கைத்தறி நெசவாளா்களுக்கு வீடு கட்டுவதற்கான ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமை வகித்து, மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 300-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியா் அறிவுறுத்தியதுடன், கைத்தறித்துறை சாா்பில் 19 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) கிஷன் குமாா், உதவி ஆணையா் கலால் ராமநாதன், கைத்தறி உதவி இயக்குநா் சங்கரேஸ்வரி, செயற்பொறியாளா் (நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) ஜெகநாதன், கைத்தறி ஆய்வாளா் ரகு, அனைத்து துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.