பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

Updated On :30 ஆகஸ்ட் 2024, 1:27 am

திருநெல்வேலியில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், வியாழக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாம். இதுகுறித்து காவல் துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அந்தப் பள்ளியின் கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி, பாளையங்கோட்டை ரஹ்மத்நகா் பகுதியில் உள்ள அந்தப் பள்ளியின் கிளையில் வெடிகுண்டு தடுப்பு போலீஸாா், மோப்பநாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...