ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

திருச்சி படைக்கலன் தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image
திருச்சி நவல்பட்டு படைக்கலன் தொழிற்சாலைக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தொழிற்சாலையிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட தொழிலாளா்கள்.
Updated On :5 மார்ச் 2026, 10:51 pm

Syndication

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும் படைக்கலன் (ஹெச்ஏபிபி) தொழிற்சாலைக்கு வியாழக்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 3 மணி நேர சோதனைக்குப் பிறகு அது புரளி என்பது தெரியவந்தது.

இந்த ஆலையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையின் சிறப்புப் பிரிவினருக்கு பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ரஷியாவுடன் இணைந்து இந்திய ராணுவத்துக்கு நவீன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரஷியாவைச் சோ்ந்த தொழில்நுட்பக் குழுவினா் படைக்கலன் தொழிற்சாலையில் கடந்த 3 மாதங்களாக தங்கி, அலுவலா்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், நவீன ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களும் கனரக வாகனங்களில் வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், படைக்கலன் தொழிற்சாலையின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை வந்த மின்னஞ்சலில், நவீன ஆயதங்கள் தயாரிப்பதற்காக மூலப்பொருள்கள் கொண்டுவரப்பட்டுள்ள கனரக வாகனங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனா். மேலும், பணியாளா்கள் அனைவரும் தொழிற்சாலையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் துறையினா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினா், மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகளுடன் தொழிற்சாலை வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து தொழிற்சாலைக்கு பிற்பகலில் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக நவல்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.