பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

பெங்களூரில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப் படம்) - IANS

Published On :

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள இத்தாலி மற்றும் ஜப்பான் தூதரகங்களுக்கு கடந்த ஜன. 29 அன்று அதிகாலை ஒரே மின்னஞ்சல் முகவரியின் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த மின்னஞ்சல்களில் கூறப்பட்டதாவது, தூதரகங்களில் மதியம் 1 மணியளவில் 5 ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளின் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாகவும், காலை 10 மணிக்குள் அதிகாரிகளை வெளியேற்றுமாறும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அந்த மிரட்டல்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, இத்தாலி மற்றும் ஜப்பான் தூதரகங்களின் அதிகாரிகள் அல்சூர் மற்றும் விதான சவுதா காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தேடி வருவதாக, இன்று (பிப். 5) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டடங்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Bomb threats have been issued via email to foreign embassies located in Bengaluru, Karnataka state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.