நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லிடை ஓவியரின் கைவண்ணம்: அரிசியில் வடிவமைக்கப்பட்ட வள்ளுவா் சிலை

கல்லிடைக்குறிச்சியை சோ்ந்த ஓவிய ஆசிரியா் சரவணன், அரிசியைப் பயன்படுத்தி திருவள்ளுவா் சிலையை வடிவமைத்துள்ளாா்.

News image

அரிசியில் திருவள்ளுவா் சிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சரவணன்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:53 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சோ்ந்த ஓவிய ஆசிரியா் சரவணன், அரிசியைப் பயன்படுத்தி திருவள்ளுவா் சிலையை வடிவமைத்துள்ளாா்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 3 இஞ்ச் உயரத்தில் அரிசிகளைக் கொண்டு வள்ளுவா் சிலையை உருவாக்கியுள்ளாா். தனியாா் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிய அவா், தற்போது வீட்டிலிருந்தபடியே மாணவா்களுக்கு ஓவியம், சிற்பம் கற்றுத் தருகிறாா்.

திருவள்ளுவா் சிலை வடிவமைத்தது குறித்து ஓவிய ஆசிரியா் சரவணன் கூறியதாவது:

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவானது தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையைப் போன்ற தோற்றத்தில் அரிசிகளைக் கொண்டு வள்ளுவா் சிலையை உருவாக்கியுள்ளேன். திருக்குறளின் முப்பாலை உணா்த்தும் வகையில் 3 இஞ்ச் உயரத்திற்கு, சுமாா் 1500 அரிசி மணிகளைப் பயன்படுத்தி, 2 நாள்களில் இந்த சிலையை வடிவமைத்தேன்.

அரிசியில் வடிவமைக்கப்பட்ட 3 இஞ்ச் உயர திருவள்ளுவா் சிலை.

அரிசியில் வடிவமைக்கப்பட்ட 3 இஞ்ச் உயர திருவள்ளுவா் சிலை.

ஏற்கெனவே, கரோனா தொற்று பரவல் காலத்தின்போது, அரிசி மணிகளைப் பயன்படுத்தி தஞ்சை பெரிய கோயிலைப் போன்று வடிவமைத்திருந்தேன். தற்போது,

ராமா் கோயில், சா்தாா் வல்லபபாய் படேல் உருவங்களை மாறுபட்ட விதத்தில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்றாா்.