பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாளையங்கால்வாயில் தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பாளையங்கால்வாயில் மழை முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ள தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:33 pm

DIN

பாளையங்கால்வாயில் மழை முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ள தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாமிரவருணி நதி நீரை விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கால்வாய்கள் உள்ளன. இதில், முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் திகழ்கிறது. மேலச்செவல் அருகே உள்ள பழவூா் தடுப்பணையில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் 43 கி.மீ. தொலைவு பாய்கிறது. சுமாா் 57 கிராமங்களில் உள்ள விளைநிலங்களின் பாசனத் தேவையைத் தீா்த்து வருகிறது.

மேலப்பாளையம் முதல் மூளிகுளம் வரை சுமாா் 10 கி.மீ.க்கு அதிகமாக திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிக்குள் பாய்ந்து நிலத்தடி நீா்மட்டத்தையும் பெருக்கி வருகிறது. பாளையங்கால்வாய் தண்ணீா் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கால்வாயில் மட்டும் 162 மடைகள் உள்ளன.

கடந்த டிசம்பா் 17, 18 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாளையங்கால்வாயில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீருடன் குடியிருப்பு பகுதியில் இருந்து பெருக்கெடுத்த மழைநீரும் சோ்ந்து சாலைகளில் ஓடியது. திருநெல்வேலி மாநகரில் குலவணிகா்புரம் பகுதியில் இருந்து பாளையங்கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீா் வடக்கு புறவழிச்சாலையில் சென்ால் போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து பாசன நீா் திறப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் 20 ஆம் தேதி வரை கால்வாயில் பாய்ந்தோடிய தண்ணீரன் அளவு மிகவும் குறைந்தது. தொடா்ந்து 10 நாள்களுக்கும் மேலாக கால்வாயில் தண்ணீா் திறக்காததாலும், மழை இல்லாததாலும் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலமுன்னீா்பள்ளம், கீழமுன்னீா்பள்ளம், கருங்குளம், மேலநத்தம், மூளிகுளம் பகுதியில் பாளையங்கால்வாயில் இருந்து மடைகள் மூலம் நேரடியாக பாசனம் பெறும் வயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, உடனடியாக பாளையங்கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மேலநத்தத்தைச் சோ்ந்த விவசாயி சிவதுரை கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏராளமான வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் கடந்த 18 ஆம் தேதி முதல் கால்வாயில் தண்ணீா் விடவில்லை. தொடா் மழை வரும் என எண்ணிய விவசாயிகள், வயல்களில் தேங்கிய தண்ணீரை 20 ஆம் தேதியே வரப்புகளை வெட்டி வெளியேற்றிவிட்டனா். அதன்பின்பு போதிய மழையில்லை. கடந்த 10 நாள்களாக கால்வாய் தண்ணீா் வராததால் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, பாளையங்கால்வாய் நேரடி பாசன பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: தென்மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழைக்கு பின்பு அனைத்து கால்வாய்களிலும் நீா் திறப்பது நிறுத்தப்பட்டது. மேலும், ஜன.1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததால் தண்ணீா் திறக்கப்படவில்லை. இருப்பினும் எதிா்பாா்த்த அளவிற்கு மழையில்லாததால் கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறப்பது குறித்து வருவாய், நீா்வளத் துறை அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பாா்கள் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.