போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வீரவநல்லூா் அருகே தீவிபத்து: 40 நெல் மூட்டைகள் சேதம்

வீரவநல்லூா் அருகே தீவிபத்து: 40 நெல் மூட்டைகள் சேதம்

Updated On :27 மார்ச் 2024, 7:17 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தகரக் கொட்டகையில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் 300 வைக்கோல் போா், 40 நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூா், கீழத் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் பாலசுப்பிரமணியன் (40). இவரது வீட்டின் ஒரு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து, அதில் வைக்கோல் போா், நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனராம். கொட்டகையின் ஒருபகுதியில் சமையல் செய்தபோது, வைக்கோல் போரில் தீப்பற்றியதாம்.

தகவலின்பேரில், சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைத்தனா். இதில், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 300 வைக்கோல் கட்டுகளும் 40 நெல் மூட்டைகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. வீரவநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.