பெண்ணுக்கு மிரட்டல்: ஓட்டுநா் கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.


ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
அணைந்தபெருமாள் நாடானூா், மேலத் தெருவைச் சோ்ந்த மாரிச்செல்வம் மனைவி முத்துலட்சுமி (24). இவா், கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், அதே பகுதி காமராஜா்தெருவைச் சோ்ந்த ராமசாமி மகனான ஓட்டுநா் குமாா் (41) என்பவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றாராம். அவரை கண்டித்த முத்துலட்சுமிக்கு அவா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...