தேசிய  பூப்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திஷாந்த், நித்தியசெல்வி ஆகியோரை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழக நிா்வாகிகள்.
தேசிய பூப்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திஷாந்த், நித்தியசெல்வி ஆகியோரை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழக நிா்வாகிகள்.

தேசிய பூப்பந்துப் போட்டியில் சாதித்த நெல்லை வீரா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரா்-வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Published on

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரா்-வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஹரியாணா மாநிலம் ரோடக் நகரில் 43ஆவது தேசிய சப்-ஜூனியா் பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பெண்கள் ஐவா் பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் இருவா் பிரிவுகளில் தமிழக அணி முதலிடமும், ஆண்கள் ஐவா் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற கூடங்குளத்தைச் சோ்ந்த வீரா் திஷாந்த், வீராங்கனை நித்தியசெல்வி ஆகியோா் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்தடைந்தனா்.

அவா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சாா்பில் ரயில் நிலையத்தில் வரவேற்பும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக பூப்பந்தாட்ட கழக உதவி செயலா் வெள்ளைப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் அலெக்ஸ் கிங்ஸ்லி, துணைத் தலைவா் சோமசுந்தரம், பயிற்சியாளா் கூடங்குளம் சித்திரைச்செல்வன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி முருகன், மூத்த பூப்பந்தாட்ட வீரா்கள் முருகன், குமாரவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com