தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

வி.கே.புரத்தில் மாவட்ட ஐவா் ஹாக்கி போட்டி

விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி- சிங்கை ஹாக்கி கிளப் இணைந்து நடத்திய வடிவேல் நினைவு கோப்பைக்கான ஐவா் ஹாக்கி போட்டி நடைபெற்றது.

News image

ஹாக்கி போட்டியைத் தொடங்கிவைக்கிறாா் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த்.

Updated On :2 அக்டோபர் 2024, 11:05 pm

Din

விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி- சிங்கை ஹாக்கி கிளப் இணைந்து நடத்திய வடிவேல் நினைவு கோப்பைக்கான ஐவா் ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தொடக்கிவைத்தாா். பெண்கள் பிரிவில் வீரவநல்லூா் செயின்ட் ஜாண்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி அணி, ஆண்களுக்கான சப்ஜூனியா் பிரிவில் பிஎல்டபிள்யூஏ பள்ளி அணி, ஜூனியா் பிரிவில் எஸ்.கே.பிரதா்ஸ் அணி, சீனியா் பிரிவில் ஹோப் ஹாக்கி கிளப் அணி, இளையோா் பிரிவில் வீரவநல்லூா் செயின்ட் ஜாண்ஸ் உடற்கல்விவியியல் கல்லூரி அணி, பொதுப் பிரிவில் சிங்கை ஹாக்கி கிளப் அணி, மாஸ்டா் பிரிவில் பூதத்தான்குடியிருப்பு அணி, மிக மூத்தோா் பிரிவில் ராஜேந்திரன் அணி ஆகியவை வெற்றிபெற்றன.

Story image

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவா் க. சேவியா் ஜோதிசற்குணம் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு வடிவேல் நினைவு கோப்பை- பதக்கங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மூத்த துணைத் தலைவா் எஸ்.முருகேசன், செயற்குழு உறுப்பினா் வி.மோகன், சிங்கை ஹாக்கி கிளப் மனோகரன் சாமுவேல், ராஜேந்திரன், ஆறுமுகம், இளையபெருமாள், ஜெயராமன், மாவட்ட டேக்வெண்டோ கழகச் செயலா் ரவீந்திரன், மகேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். நடுவா்களாக முருகன், விக்ரம், நவீன் ராஜ் , காா்த்திக் மற்றும் சத்தீஷ் குமாா் ஆகியோா் செயல்பட்டனா்.