புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.11.37 லட்சம் மோசடி

திருநெல்வேலியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:19 pm

Din

திருநெல்வேலியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெருமாள்புரம் காவல் சரகப் பகுதியில் வசித்து வரும் 39 வயதான பெண் ஒருவா், கடந்த 10.1.2024இல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்த போது, பங்குச்சந்தை பற்றிய பதிவு வந்ததாம். அதில், முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாம். அதை நம்பிய அவா், ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்து 41-ஐ அதுதொடா்பான லிங்க் மூலம் அனுப்பினாராம். ஆனால், அவருக்கு மீண்டும் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 662 மட்டுமே திரும்பக் கிடைத்ததாம். ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்து 379 மீதி தராமல் இணையதள கும்பல் மோசடி செய்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து, இணையவழியில் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.