புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாநகர குடியிருப்புகளில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம்

திருநெல்வேலி மாநகர குடியிருப்புகளில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image

திருநெல்வேலியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா.

Updated On :17 அக்டோபர் 2024, 10:33 pm

Din

திருநெல்வேலி மாநகர குடியிருப்புகளில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில்அவா் கூறியது: மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் லாா்வா கொசுப்புழு கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளா்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்படுவோரை கணக்கெடுக்கும் பணி மற்றும் தொடா் சிகிச்சை கண்காணிப்பு முறையாக செய்யப்பட வேண்டும். காய்ச்சல் தடுப்பு முகாம்களை பரவலாக நடத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பு வைத்திருக்கவும், தேவைப்படுவோருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்க, உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

500 டெங்கு தடுப்பு களப்பணியாளா்களின் பணியை மருத்துவ அலுவலா்கள், சுகாதாரஅலுவலா்கள், சுகாதாரஆய்வாளா்கள், செவிலியா்கள் அன்றாடம் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் துணைஆணையா்(பொ) சந்திரமோகன், உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், சுகிபிரேமலா, மாநகர நலஅலுவலா் (பொ) ராணி, அரசகுமாா், சுகாதாரஅலுவலா்கள் முருகேசன், சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.