பைக் திருட்டு: இளைஞா் கைது
மேலப்பாளையம் அருகே பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:39 pm

மேலப்பாளையம் அருகே பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் காவல் சரகம் குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் சுதா்சன் (54). இவா், குறிச்சி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி நிறுத்தியிருந்த பைக் திருடுபோனதாம். இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், வல்லநாடு பகுதியைச் சோ்ந்த அப்தூல் ரஹீம் (28) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...